Advertisement

அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டிம் செய்ஃபெர்ட் - வைரல் காணொளி!

கயானா அணிக்கு எதிரான சிபிஎல் இறுதிப்போட்டியில் லூசியா கிங்ஸ் வீரர் டிம் செய்ஃபெர்ட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டிம் செய்ஃபெர்ட் - வைரல் காணொளி!
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டிம் செய்ஃபெர்ட் - வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 07, 2024 • 10:03 AM

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கோலாகலமாக முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 07, 2024 • 10:03 AM

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக டுவைன் பிரிட்டோரியஸ் 25 ரன்களையும், ஷாய் ஹோப் 22 ரன்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 7, ஃபாஃப் டூ பிளெசிஸ் 21, அக்கீம் அகஸ்டே 13, டிம் செஃபெர்ட் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். 

பின்னர் இணைந்த ஆரோன் ஜோன்ஸ் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஜோன்ஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அணியையும் வீழ்த்தி அசத்தியது.

 

இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக் தொடரி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம், தொடர் முழுதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் தொடர் நாயகன் விருதை வென்றார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் வீரர் டிம் செய்ஃபெர்ட் பிடித்த அபார கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை அல்ஸாரி ஜோசப் வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே கீமோ பால் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்ததுடன், பேட்டில் எட்ஜாகி சென்றது. இதனை சரியாக கணித்த டிம் செய்ஃபெர்ட் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் டிம் செய்ஃபெர்ட் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement