
Tim Seifert Will Replace Injured Devon Conway In The T20 World Cup Final Against Australia, Confirms (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.
இதுவரை இரு அணிகளுமே டி20 உலகக்கோப்பை தொடரை வென்றதில்லை என்பதால், எந்த அணி வெற்றிப்பெற்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துடனான போட்டியின் போது நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே காயமடைந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது காயம் தீவிரமடைந்தது தெரியவந்தது.