வாக்னரின் ஓய்வு முடிவை திரும்பப்பெற கூறும் நியூசிலாந்து? ஹின்ட் கொடுத்த சௌதீ!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு முடிவை அறிவித்த நெய்ல் வாக்னர் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியோ அல்லது சமனிலோ முத்தால் கூட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். இதனால் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்த நெய்ல் வாக்னரை மீண்டும் களமிறக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் அணியில் செய்யக்கூடிய மாற்றம் இன்னும் இன்னும் விவாதிக்கவில்லை. ஏனெனில் வில்லியம் ஓ ரூர்கின் காயம் எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. மேலும் அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்தும், அவர் தற்போது எந்தளவு காயத்தை சந்தித்துள்ளார் என்பது குறித்தும் அணியின் பிசியோ எந்த தகவலையும் வழங்கவில்லை. இன்னும் சில தினங்களுக்கு பிறகே வில்லியம்மின் காயம் குறித்தும், அவர் எப்போது குணமடைவார் என்பது குறித்தும் தகவல்கள் வரும். ஆனால் என்னைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவரது காயம் குறித்த அப்டேட் கிடைக்கும் என நம்புகிறேன்.
மேலும் கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டில் யார் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது குறித்து வெளிப்படையாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் தற்போது உள்ளோம். மேலும் கடந்த வாரம் நெய்ல் வாக்னர் தனது ஓய்வை அறிவித்தாலும், அவர் எங்களுக்காக களத்தில் மாற்று வீரராக செயல்பட்டார். அது ரசிகர்களின் வர்வேற்பையும் பெற்றிருந்தது. மேலும் அவர் நீண்ட காலமாக ரசிகர்களின் விருப்பமான வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் நெய்ல் வாக்னரை ஓய்வு முடிவிலிருந்து திரும்பபெற்று நியூசிலாந்து அணிக்காக விளையாடுவார் என்பதை டிம் சௌதீ மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now