
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டிம் சௌதீ, தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சக வீரராக நியூசிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடவுள்ளார். இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.