
கடந்த 2018இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடை பெற, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் நியமிக்கப்பட்டனர்.
அந்த 2018 தென் ஆப்பிரிக்க தொடர் முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திவந்த டிம் பெய்ன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 2017 பிரிஸ்பேன் டெஸ்ட்டின்போது பெண் பணியாளர் ஒருவரை பாலியலுக்கு அழைத்து, டிம் பெய்ன் ஆபாச மெசேஜ்கள், அவரது நிர்வாணப் புகைப்படம் ஆகியவற்றை அனுப்பியது அம்பலமானதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கூறி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.