
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பெஸ்ட் இன்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நேற்று விளையாடியது. முதல் போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த நிலையில் நேற்று விளையாடிய இரண்டாவது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தற்பொழுது தொடரில் மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில், இந்தத் தொடரில் முதல்முறையாக வாய்ப்பு பெற்று இருக்கும் இளம் வீரர் திலக் வர்மா பேட்டிங் மட்டுமே குறிப்பிடும்படியாக இருந்து வருகிறது. மற்ற இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில் எந்த வித புத்திசாலித்தனமும் வெளிப்படவில்லை.
நேற்று இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்பை மோசமாக வீணடித்தார். வெஸ்ட் இண்டீஸ் இடது கை சுழற் பந்துவீச்சாளர் பந்தை கிரீசில் இருந்து இறங்கி வந்து தேவையில்லாமல் அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். அவரது ஆட்டத்தில் தைரியம் மட்டும் தான் இருக்கிறதே தவிர புத்திசாலித்தனம் கொஞ்சம் கூட தென்படவில்லை. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.