
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது போட்டியில் டிரின்பாகோ நைட் ரிரைடர் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜமைக்கா அணியில் கேப்டன் பிராண்டன் கிங் 8 ரன்களுக்கும், அமிர் ஜோங்கோ 13 ரன்களுக்கும், பிளாக்வுட் 29 ரன்களுக்கும், ஷமாரா ப்ரூக்ஸ் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய இமாத் வாசிம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
ஆனால் மறுபுறம் களமிறங்கிய ஃபாபியன் ஆலன், கிறிஸ் கிரீன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம கடந்து 62 ரன்களை எடுத்திருந்த இமாத் வாசிமும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் அலி கான் 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.