
இந்தியாவில் உள்ள சர்வதேச தரத்திலான மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மைதனம் பல சாதனைகள் வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெற்றியும் இங்கு தான்.
கடந்த 1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த புகழ்வாய்ந்த மைதானத்தில் இன்று வரை பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு லண்டனை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சேப்பாக்கம் மைதானத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. அடிலெய்ட் ஓவல் மற்றும் லண்டன் லார்ட்ஸ் மைதான அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த மைதானத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டடம் பாரம்பரியமிக்க புரதான சின்னம் என்று அறிவிக்கப்பட்டதால், அதை மட்டும் இடித்து புதுப்பிக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசிடம் அனுமதி கோரி வந்தது.