
TNPL 2021: CSG have finished with 165 (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளுக்கும் வகையில் கௌசிக் காந்தி ஒரு ரன்னிலும், சுஜய் ரன் ஏதுமின்றியும், ராஜகோபால் சதீஷ், சோனு யாதவ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஜெகதீசன் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தினார். பின் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீசன் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.