
TNPL 2021 : Dindigul Dragons beat Thiruppur Thamizans by 6 wickets (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணியில் தினேஷ், முகமது ஆஷிக் ஆகியோர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த சித்தார்த் - மான் பாஃப்னா இணை அதிரடியாக விளையாட தொடங்கியது.
இதில் சித்தார்த் 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த மான் பாஃப்னா அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவரும் 52 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே சேர்த்தது.