டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் லீக் போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்தாண்டு கரோனா காரணமாக நடத்தப்படவில்லை. தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Trending
ஏற்கனவே 3 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 4வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் ( Dindigul Dragons), மதுரை பாந்தர்ஸ் ( Madurai Panthers) அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி தொடங்குகிறது. கொரோனா அச்சம் காரணமாக, பார்வையாளர்களின்றி இத்தொடர் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு கரோனா காரணமாக போட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மழையால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் போதும் மழை பெய்து, அதில் இரண்டு போட்டிகள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டம் முழுமையாக நடைபெற்றதால், இனி வரும் போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விவரம்
திண்டுக்கல் டிராகன்ஸ்: கே விஷால் வைத்தியா, எஸ் அருண், அத்வைத் சர்மா, ஆர் சுதேஷ், எஸ் சுவாமிநாதன், எல் விக்னேஷ், ஆர் சீனிவாசன், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், எஸ்.லோகேஷ்வர், சி ஹரி நிஷாந்த், சி அஸ்வின், எம்.எஸ்.சஞ்சய், வி லக்ஷ்மன், கே மணி பாரதி, ஏ.ஆர்.சிவா முருகன், குர்ஜப்னீத் சிங், ஆர் விமல் குமார், கிஷன் குமார் எஸ், விக்னேஷ்வரன் எஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆர் விவேக், எம் சிலம்பரசன்.
சீச்செம் மதுரை பாந்தர்ஸ்: ஆர் மிதுன், வி கௌதம், பிஎஸ் நிர்மல் குமார், என்.எஸ்.சதுர்வேதி, பி பிரவீன் குமார், பி அனிருத் சீதா ராம், கே.பி. அருண் கார்த்திக், ஆர் ரோஹித், ஆர் ஆஷிக் சீனிவாஸ், ஜே கௌசிக், டி.டி. சந்தரசேகர், ஷாஜகான், கே தீபன் லிங்கேஷ், வருண் சக்ரவர்த்தி, ஜே சுப்பிரமணியம், ராஜ்குமார் கே, சுகேந்திரன் பி, சரவணன் பி.கே, ஆதித்யா வி, சுனில் சாம், எல் கிரண் ஆகாஷ்.
Win Big, Make Your Cricket Tales Now