
TNPL 2021 Eliminator : Dindigul Dragons get into the second Qualifier 2 (Image Source: Google)
டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில்டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து களமிறங்கிய கோவை அணி சாய் சுதர்சனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்சன் 57 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணியில் சுரேஷ், மணி பாரதி, ஸ்ரீநிவாசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.