டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த சேப்பாக்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேப்பாக் அணிக்கு ஜெகதீசன் - கௌஷிக் காந்தி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Trending
பின் 26 ரன்களில் கௌஷிக் காந்தி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ராதாகிருஷ்ணன், சசிதேவ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜெகதீசன் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெகதீசன் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் தங்கள் பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி அசத்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது.
திருச்சி அணி தரப்பில் ராஹில் ஷா, பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now