டிஎன்பிஎல் 2021: கோப்பையை வெல்லப்போவது யார்? வாரியர்ஸ் vs சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதவுள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளோடு நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது முடிவை எட்டியுள்ளது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் முடிவில் திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
Trending
நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் , சேலம் ஸ்பார்டன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 8 இடங்களை பிடித்து வெளியேறின.
கடந்த 10ஆம் தேதி பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்கியது. இதன் முதல் தகுதிச்சுற்று போட்டியில் திருச்சி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதன்பின் எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்று, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் விளையாடிய திண்டுக்கல் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோழ்வியைத் தழுவியது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆணிகள் மீண்டும் மோதவுள்ளன. நடப்பு சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகளிலும் திருச்சி அணி வெற்றிபெற்றுள்ளது.
அதனால் நிச்சயம் அந்த அணி இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள சேப்பாக் அணியும், நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதால், அந்த அணியும் 3ஆவது கோப்பைக்கு போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளிலுமே அதிரடியான வீரர்கள், சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பது போட்டியின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
உத்தேச அணி
ரூபி திருச்சி வாரியர்ஸ் : அமித் சாத்விக், சந்தோஷ் சிவ், நித்திஷ் ராஜகோபால், முகமது அத்னான் கான், ஆதித்யா கணேஷ், ஆண்டனி தாஸ், எம் மதிவண்ணன், ஆகாஷ் சும்ரா, சர்வன் குமார், ரஹில் ஷா (கே), சுனில் சாம்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌஷிக் காந்தி (கே), ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், ஜெகநாத் சீனிவாஸ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், அலெக்சாண்டர்.
Win Big, Make Your Cricket Tales Now