
TNPL 2021: Lyca Kovai Kings face off Ruby Trichy Warriors today (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஷாரூக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணி, ராஹில் ஷா தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துக்கிறது.
நடப்பு சீசனின் முதல் போட்டியில் விளையாடி லைக்கா கோவை கிங்ஸ் அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியிருந்தது. ஆனால் அப்போட்டியின் பாதியிலேயே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய கோவை அணி காத்திருக்கிறது. ஷாரூக் கான், சுதர்சன், கங்கா ஸ்ரீதர் ராஜு என அதிரடியான பேட்ஸ்மேன்கள் கோவை அணியில் உள்ளதால், நிச்சயம் இப்போட்டியை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.