
TNPL 2021 : Lyca Kovai Kings finish on 169 (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 27ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு கங்கா ஸ்ரீதர் ராஜூ - சுரேஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. பின் 20 ரன்களில் ராஜூ ஆட்டமிழக்க, 36 ரன்களில் சுரேஷும் விக்கெட்டை இழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன், அதீக் உர் ரஹ்மான், முகிலேஷ் ஆகியோரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர்.