
TNPL 2021: Lyca Kovai Kings finish with 201/1 (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் கோவை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு - சுரேஷ் குமார் இணை அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுரேஷ் குமார் ஆட்டமிழந்தார். பின்னர் கங்காவுடன் இணைந்த சாய் சுதர்சனும் அதிரடி ஆட்டத்தைக் கையிலேடுக்க கோவை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.