
TNPL 2021: Madurai Panthers beat Dindigul Dragons by 5 Wickets (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் ரோஹித், ஜெகதீசன் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 18.5 ஓவர்களிலேயே திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது. மதுரை அணி தரப்பில் ரோஹித், ஜெகதீசன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.