
TNPL 2021: Madurai Panthers bowled out Dindigul Dragons for 96 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் ஐந்தாவது சீசனில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தனது. அந்த அணியில் ஹரி நிசாந்த், அருண், ஸ்ரீனிவாசன், ஹரிஹரன், சுவாமிநாதன் என அனைவரும் வந்தவேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய மணி பாரதி அதிரடியாக விளையாடி ஒரு சில பவுண்டரிகளை விளாசினாலும், 21 ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். பின்னர் வந்த வீரர்களும் எடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே சேர்த்தது.