
TNPL 2021: Nellai Royal Kings Face off Ruby Trichy Warriors today (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளும் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பாபா அபாரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ராஹில் ஷா தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.