
TNPL 2021: Nellai Royal Kings won by 7 wkts (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீச் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும், மறுமுனையில் ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், 95 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.