
TNPL 2021 Qualifier 1 : Chepauk Super Gillies finishes with 153/3 (Image Source: Google)
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீ - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கௌஷிக் காந்தி, ஜெகதீசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அவருடன் இணைந்து விளையாடிய சசிதேவ், ராஜகோபால் ஆகியோரும் ஒருசில பவுண்டரிகளை விளாசியனர்.