
TNPL 2021 Qualifier 2 : Chepauk Super Gillies win by 8 wickets (Image Source: Google)
பரபரப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹரி நிஷாந்த் 57 ரன்களைச் சேர்த்தார். சேப்பாக் அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.