
TNPL 2021: Rain stops play (Image Source: Google)
டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச தீமானித்தது.
இதையடுத்து களமிறங்கிய மதுரை அணி தொடக்கத்திலேயே பிரவின் குமார், அருண் கார்த்திக் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய அனுராதா சிதா ராம் - சத்துர்வேத் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் கணக்கை உயர்த்தியது. பின் 37 ரன்களில் சத்துர்வேத் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த சிதா ராம் அரைசதம் கடந்தார்.