
TNPL 2021 : Ruby Trichy Warriors go back to the Top of the table (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - ரூபி திருச்சி வாரியஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய சேலம் அண்யில் முருகன் அஸ்வினைத் தவிர வேறு யாரும் சரிவர விளையாடாததால், 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி அணிக்கு சந்தோஷ் சிவ், அமித் சத்விக் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினார்.