
TNPL 2021: Salem Spartans end with 142/7 (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேலம் அணிக்கு கோபிநான், விஜய் சங்கர், டெரியல் ஃபெராரியோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருப்பினும், அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே சேர்த்தது.