
TNPL 2021: Salem Spartans won by 11 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சேலம் அணி விஜய் சங்கர், முருகன் அஸ்வின் ஆகியோரது அதிரடியான் ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது . இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 47 ரன்களையும், முருகன் அஸ்வின் 30 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணி தொடக்கத்திலேயே அருண் கார்த்திக், சுஜிந்திரன் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.