டிஎன்பிஎல் 2021: திருப்பூரை வீழ்த்தியது சேலம்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபெராரியோ 40 ரன்களையும், அபிஷேக் 38 ரன்களையும் சேர்த்தனர்.
Trending
பின் இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தினேஷ், முகமது ஆசிக், அரவிந்த், மான் பாஃப்னா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினேர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய ஃபிரான்சிஸ் ரோகின்ஸ் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மெட்டுமே சேர்த்தது.
இதன் மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி, டிஎன்பிஎல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now