
TNPL 2021: Season 5 starts today (Image Source: Google)
ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற இருந்த ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் இன்று முதல் சென்னையில் தொடங்கவுள்ளன. மொத்தம் எட்டு அணிகளுடன் நடைபெறும் இத்தொடர் ரவுண்ட் ராபீன் முறையில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றுக்காளாக நடைபெற உள்ளன.