டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் வைத்தியா 2 ரன்னுக்கும், நிஷாந்த் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.
Trending
கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார். ஹரிகரன் 6 ரன்னுக்கும் மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. சேப்பாக் அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கேப்டன் கௌஷிக் காந்த் - நாராயணன் ஜெகதீசன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கௌஷிக் காந்தி 44 ரன்களிலும், ஜெகதீசன் 31 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த சசிதேவ் 15 ரன்களிலும், சோனு யாதவ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.2 ரன்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now