Advertisement

டிஎன்பிஎல் 2023:சன்னி சந்து அரைசதம்; திண்டுக்கல்லுக்கு 161 டார்கெட்!

திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.  

Advertisement
TNPL 2023: A respectable total on the board by Salem Spartans!
TNPL 2023: A respectable total on the board by Salem Spartans! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 03, 2023 • 09:04 PM

டிஎன்பில் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 26ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன். இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டிக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 03, 2023 • 09:04 PM

அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு அரவிந்த் மற்றும் கௌசிக் காந்தி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கௌசிக் காந்தி 7 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கவின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Trending

அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அரவிந்தும் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சன்னி சந்து - ஹரிஹரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அபாரமாக செயல்பட்ட சன்னி சந்து அரைசதம் கடந்து அசத்தினார். 

அதேசமயம் ஹரிஹரன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடித்த சன்னி சந்து 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்த் ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது.   

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement