
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்படி ஜாஃபர் ஜமால்,ஸ்ரீனிவான், ஃபெர்ராரியோ, மணி பாரதி, ஷாஜகான், அந்தோனி தாஸ் என அடுத்தடுத்து ஒற்றையிழக்க ரன்களோடு பெவிலியன் திருபினர்.
அதன்பின் கங்கா ஸ்ரீதர் ராஜுவுடன் இணைந்த ராஜ்குமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கங்கா ஸ்ரீதர் ராஜூ 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து 2 ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராஜ்குமாரும் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.