
டிஎன்பிஎல் லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய திரூப்பு தமிழன்ஸ் அணிக்கு துஷார் ரஹேஜா - சத்துர்வேத் இணை களமிறங்கினர். இதில் ரஹேஜா 2 ரன்களிலும், சத்தூர்வேத் 8 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விசால் வைத்யாவும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த் ராதாகிருஷ்ணன் - விஜய் சங்கர் இணை ஓராளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராதாகிருஷ்ணன் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து விஜய் சங்கர் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க அணியும் தடுமாற்றத்தை சந்தித்தது.