Advertisement

டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பிரதேஷ் பால்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan June 13, 2023 • 21:09 PM
TNPL 2023: Chepauk Super Gillies post a total of 217 on their 20 overs!
TNPL 2023: Chepauk Super Gillies post a total of 217 on their 20 overs! (Image Source: Google)
Advertisement

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகமலாக தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை எதிரத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரதோஷ் பால் - நாராயணன் ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் பால் அரைசதம் கடந்து அசத்தினார்.

Trending


அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பிரதோஷ் பால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 88 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பாபா அபாரஜித்தும் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹரிஷ் குமார் 8 ரன்களிலும், ராஜகோபால் சதிஷ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.   

இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த சஞ்சய் யாதவ் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைக் குவித்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement