
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ராதா கிருஷ்ணன் 10 ரன்களில் ஆட்டமிழக்க, துஷார் ரஹேஜா 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சாய் கிஷொர் - விஜய் சங்கர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அண்யின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் கிஷோர் 45 ரன்களிலும், விஜய் சங்கர் 43 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.