
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய 23 ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படிம் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கேப்டன் அருண் கார்த்திக் நிதானமாக விளையாடி 33 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, என் எஸ் ஹரிஷ் 21 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 159 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காளமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ஆரம்பம் முதலே பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர்.