டிஎன்பிஎல் 2023: நெல்லையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர்!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு ஸ்ரீ நெரஞ்சன் - சூர்யபிரகாஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சூர்யபிரகாஷ் 10 ரன்களிலும், நெரஞ்சன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அருண் குமார் 2 ரன்களுக்கும், அருண் கார்த்திக் 4 ரன்களிலும், லக்ஷய் ஜெய்ன் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
அதன்பின் களமிறங்கிய சோனு யாதவ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஈஸ்வரன் 15 ரன்களுக்கும், குருசுவாமி 20 ரன்களிலும் ஆட்டமிழக்க 35 ரன்களைச் சேர்த்திருந்த சோனு யாதவும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாகும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் 18.2 ஓவர்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை அட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன் -துஷர் ரஹேஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 73 ரன்களைச் சேர்த்த நிலையில் ராதாகிருஷ்ணன் 34 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து துஷர் ரஹேஜா 49 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் அதிரடியாக விளையாடி 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதியில் அனிருத்- கனேஷ் இணை அணியை இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now