Advertisement

டிஎன்பிஎல் 2023: ராம் அரவிந்த் அரைசதம்; ஸ்பார்ட்டன்ஸுக்கு 200 டார்கெட்!

சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
TNPL 2023:  Lyca Kovai Kings posted a total off 199 on their 20 overs!
TNPL 2023: Lyca Kovai Kings posted a total off 199 on their 20 overs! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 27, 2023 • 08:57 PM

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 27, 2023 • 08:57 PM

அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் - சுரேஷ் குமார் இணை களமிறங்கினர். இதில் சுரேஷ் குமார் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் சுஜயுடன் இனைந்த சாய் சுதர்சன் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Trending

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களில் சுஜயும், 41 ரன்களில் சாய் சுதர்சனும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆதிக் உர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.  அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான், முகமது ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராம் அரவிந்த் 22 பந்துகளில்  2 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி அரைசதம் கடந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைக் குவித்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement