
TNPL 2023: Madurai Panthers posted a decent total on board against Tiruppur Tamizhans! (Image Source: Google)
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 27ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - சுரேஷ் லோகேஷ்வர் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஆதித்யா 37 ரன்களைச் சேர்த்து உதவினார். பின்னர் களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 17 ரன்களுக்கும், ஜெகதீசன் கௌசிக் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.