
TNPL 2023: Salem Spartans set a formidable target with Sunny Sandhu's brilliant knock against iDream (Image Source: Google)
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடகக் வீரர்கள் கௌசிக் காந்தி ரன்கள் ஏதுமின்றியும், அரவிந்த் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கவினும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சன்னி சந்து அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் அதிரடியை கைவிடாத சன்னி சந்து அரைசதம் கடந்து அசத்தினார்.