
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதேசமயம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அமித் சாத்விக் - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 8 ரன்கள் எடுத்த நிலையில் துஷார் ரஹேஜா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக்கும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கல் பாலச்சந்தர் அனிருத் 6 ரன்களிலும், ராதாகிருஷ்ணன், கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கனேஷ் - மான் பாஃப்னா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் 17 ரன்களில் கனேஷும், 26 ரன்களில் மான் பாஃப்னாவும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஜித் ராமும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார்.