
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியானது 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அத்துடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்கள் எடுத்திருந்த ராதாகிருஷ்ணன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜாவும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கனேஷும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தர்.
அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமித் சாத்விக் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 13 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சுபோத் பாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் 4 ரன்களி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து விமர் குமார் 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.