சர்வதேச அளவில் மான்கடிங் (ரன் அவுட்) விக்கெட்டிற்கு புகழ்பெற்றவர் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஒவ்வொரு முறையும் இந்த முறையில் வீரர்கள் விக்கெட்டை இழக்கும் சமயத்தில் அஸ்வினின் ஆதரவு குரலானது ஓங்கும். ஏனெனில் பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்னேரே நான் ஸ்டிரைக் பேட்டர்கள் க்ரீஸை விட்டு வெளியேறுவது கிரிக்கெட்டின் மான்பை குறைப்பதுடன், அது பேட்டர்களுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டிவந்தார்.
மேற்கொண்டு தொடர்ச்சியாக இதுபோன்ற விக்கெட்டுகளை வீழ்த்துவதை நடைமுறை படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அஸ்வின் கோரிக்கை வைத்து வந்தார். அதன் பயனாக கடந்தாண்டு முதல் மான்கட் முறையானது அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், இறுதியில் ஐசிசியின் இந்த முடிவானது அஸ்வினுக்கு கிடைத்த வேற்றியாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பந்துவீச்சாளர் பந்துவீசுவதற்கு முன்னர் நான் ஸ்டிரைக்கர் பேட்டர் க்ரீஸை விட்டு வெளியேறக்கூடாது என ஒவ்வொரு முறையும் அழுத்தமாக கூறிவரும் அஸ்வின், அதனை மறந்த சம்பவம் தான் தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.