
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லோகேஷ் ராஜின் அபாரமான பந்துவீச்சின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற திண்டுக்கல் அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மோஹித் ஹரிஹரன் 4 ரன்னிலும், ஆசிக் 14 ரன்னிலும், ஜெகதீசன் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் அபாரஜித் - விஜய் ஷங்கர் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் விஜய் ஷங்கர் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய அபாரஜித்தும் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் சுனில் கிருஷ்ணா அதிரடியாக விளையாடி 32 ரன்களைச் சேர்க்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.