
திருநெல்வேலி: லோகேஷ்வரின் ஆபாரமான ஆட்டத்தின் காரணமாக லைகா கோவை கிங்ஸ் அணியானது நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணிக்கு ஜிதேந்திர குமார் மற்றும் லோகேஷ்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் ஜிதேந்திர குமார் 9 ரன்கள் மட்டுமே எடுத்த் கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் 10 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாரூக் கான் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த லோகேஷ் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 90 ரன்களை சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் லைகோ கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது.