
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சந்தோஷ் மற்றும் ரதி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற நெல்லை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹரி நிஷாந்த் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் அரைசதம் கடந்து அசத்திய ஹரி நிஷாந்த் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்க் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது 28 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் சச்சின் ரதி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.