
Tom Latham breaks Sachin Tendulkar's 24-year-old record with ton against Netherlands (Image Source: Google)
நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லாதம் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து ஆடிய நெதர்லாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், பிறந்தநாள் அன்று அதிக ரன்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை டாம் லாதம் படைத்துள்ளார். இவர் 140 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் சச்சினின் 24 ஆண்டு கால சாதனையை டாம் லாதம் முறியடித்துள்ளார்.