-mdl.jpg)
சமகால கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் இருவரும் தங்களது பேட்டிங் திறமையின் காரணமாக ஒப்பிடப்பட்டு வருகிறார்கள். விராட் கோலி தற்கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். மிகக் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக அடித்துள்ள 49 சதங்களை முறியடிப்பதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சீராக ரன்களை எடுத்து வருவதில் விராட் கோலிக்கு நெருக்கமாக இருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு நல்ல சராசரி இருக்கிறது. இருவருக்கும் இருக்கும் வித்தியாசம், விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் பாபரை விட நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குறைந்தபட்சம் இரண்டு முறை மோதிக் கொள்வதற்கான வாய்ப்பில் இருக்கின்றன. எனவே இந்த தொடர் குறித்தும், விராட் கோலி பாபர் ஆசமை ஒப்பிட்டும் நிறைய கருத்துக்கள் முன்னாள் வீரர்களிடமிருந்து வருகிறது.