Advertisement

சர்வதேச டெஸ்டில் மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Advertisement
சர்வதேச டெஸ்டில் மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!
சர்வதேச டெஸ்டில் மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 15, 2025 • 03:38 PM

Top 5 Lowest Scores in Test Cricket: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 15, 2025 • 03:38 PM

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களில் ஆல் அவுட்டாகி 202 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 14.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த இரண்டாவது அணி எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1955 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு ஆல் அவுடானதே மோசமான சாதனையக இருந்து வருகிறது.

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில் தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களில் ஆல் அவுட்டாகி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கடுத்த மூன்று குறைந்தபட்ச ஸ்கோரை தென் ஆப்பிரிக்க அணி பதிவுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி 1896ஆம் ஆண்டு இங்கிலாந்துகு எதிராக 30 ரன்களிலும், 1924ஆம் ஆண்டு 30 ரன்னிலும், 1899ஆம் ஆண்டு 35 ரன்களிலும் என ஒரு இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement