
இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. பெருந்தொற்றுக்கு மத்தியிலும் பார்வையாளர்களின்றி பலத்த பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அதிகரித்துவரும் கரோனா பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வீரர்கள் பலர் விலகிவருகின்றனர்.
ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆண்ட்ரூ டை ஆகியோரும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வினும் விலகியுள்ளனர்.
அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்பட பலர் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சிறந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் விரைவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.